• Tue. Feb 18th, 2025

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

Byவிஷா

Mar 14, 2024

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார்.
நாளை தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி. நாளை காலை 11:15 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்க உள்ளனர்.