• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ.வி அருகே பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கொடுத்த வரவேற்பு..!

Byகிஷோர்

Nov 1, 2021

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுததூர் அருகே உள்ளே பள்ளியில், மாணவர்களை மேளதாளங்கள் முழங்க தலைமை ஆசிரியர் வரவேற்பு கொடுத்ததுடன், புத்தாடைகளும், இனிப்புகளும் வழங்கியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று கட்டுப்பாடுகளுடன் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மேலும் நீண்ட நாட்களுக்குப் பின்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் அவர்களை சிறப்பாக வரவேற்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி மாணவர்களை தலைமையாசிரியர் ஜெயக்குமார் வீட்டிற்கே சென்று மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு அழைத்து வந்தார் மேலும் பள்ளி நுழைவாயிலில் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்கப்பட்டது. அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர்.