
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்தநாள் மற்றும் 59 வது குருபூஜை விழா கடந்த 30ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
இதற்காக இன்று மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் செல்லும் வழியில், தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பசும்பொன் செல்லும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முத்துராமலிங்க தேவருக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட 13.5 கிலோ எடையுள்ள தங்ககவசத்தை திரும்ப பெற்று அதனை மதுரை அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் ஒப்படைக்க உள்ளார்.
கடந்த அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்தநாள் மற்றும் 59 வது குருபூஜை விழா மிகக்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், குருபூஜையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தற்போது மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.