பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் 40/24
த/பெ செல்வராஜ் (வெள்ளாளர்) இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர்
மனைவி காசினி 34/24, குழந்தைகள் பிரகாஷினி 17/24 , சுரேந்தர் 14/24 இறந்து போன யோகேந்திரன் பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 20 வருடங்களாக குடியிருந்து வருவதாகவும், புதிய பேருந்து நிலையம் அருகில் மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடையில் டிபன் வியாபாரம் செய்து வருவதாகவும், இவர் தனது மனைவி காசினியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இந்நிலையில் கடந்த 5 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்த யோகேந்திரன் இன்று 21.2.24 ந் தேதி மேற்படி சம்பவ இடத்தில் பாதாம் மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)