• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூரில் கெட்டுப்போன சிக்கனை கொடுத்த எரக்குடி மெஸ் – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

ByT.Vasanthkumar

Feb 21, 2024

பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது பிரபல எரக்குடி மெஸ். இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதியம் கிரில் சிக்கன் மற்றும் சப்பாத்தி பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பார்சலை பிரித்து பார்த்த பொழுது சிக்கனிலிருந்து கெட்டுப்போன வாடை அடித்துள்ளது.

உடனே இது குறித்து ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஹோட்டல் மாஸ்டரிடம் கேட்ட பொழுது அந்த சிக்கன் நேற்று செய்தது என கூறியதைக் கேட்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சிக்கன் உங்க பிள்ளைகளுக்கு கொடுப்பீங்களா என வாடிக்கையாளர் கடமையாக ஹோட்டல் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஹோட்டலில் விசாரணை செய்து வருகின்றனர். மதியம் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.