• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ராகவா லாரன்சின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பட அறிவிப்பு…

Byமதி

Oct 29, 2021

ராகவா லாரன்சின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்தநிலையில் இவரின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

வெற்றிப்பட இயக்குநரான கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க, எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.