• Sun. Nov 1st, 2026

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகத்திற்கு இந்துமக்கள்கட்சி கண்டன அறிக்கை செய்தி!

ByKalamegam Viswanathan

Nov 1, 2026

உலகப்பிரசித்து பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மேற்கு ஆடி வீதியில் சுமார் 50 ஆண்டுகளாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பசுமடம் இயங்கி வருகிறது.அங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட பசுக்களை திருக்கோயில் நிர்வாகம் பராமரித்து வந்தனர்.மீனாட்சி அம்மனுக்கும்,சுந்தரேசுவரருக்கும் ஐந்து கால பூஜையின் மேற்கண்ட பசுமடத்தில் இருந்து தான் பால் அபிஷேகம் காலம் காலமாக நடைபெற்று வந்தது.

திருக்கோவிலில் தினமும் மற்றும் விசேஷ நாட்களில் கோபூஜை நடைபெறுகிறது. இந்துமத நம்பிக்கைகளின் படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசுமடத்தில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி வழிபாடு செய்கின்றனர்.

இதற்காக அகத்திக்கீரையை விற்பனை செய்வதற்காக கீரை ஏலமே பல லட்சரூபாயுக்கு திருக்கோயில் நிர்வாகம் ஏலம் விடுவார்கள்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக திருக்கோயில் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பசுமடத்தில் இருந்த சுவாமி வீதி உலாவின் போது கொட்டுடன் செல்லும் மாடும்,கோமாதா பூஜைக்குள்ள மாடும் தவிர மற்ற பத்திற்க்கும் மேற்பட்ட பசுக்களை எல்லாம் வாகனத்தில் ஏற்றி திருக்கோயிலுக்கு சொந்தமான பண்ணையில் பசுக்களை இறக்கி உள்ளனர்.

இதனால் திருக்கோயிலில் தினந்தோறும் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு வழக்கத்திற்கு மாறாக வெளியில் இருந்து பாக்கெட் பால் விலைக்கு வாங்கி அபிஷேகம் நடக்கிறது.

பசுமடத்தில் உள்ள பசுக்களை பண்ணைக்கு அப்புறப்படுத்தி பசுமடம் பூட்டி கிடப்பதாலும்,அகத்திக்கீரைக்கடை இல்லாததாலும் பசுக்களுக்கு கீரை கொடுக்க வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து மனவேதனையுடன் திரும்பி செல்கிறார்கள்.

திருக்கோயிலில் உள்ள பசுமடத்தில் உள்ள பசுக்கள் மூலமாக மீனாட்சி சுந்தரேசுவரருக்கு காலம் காலமாக சுத்தமான பசும்பாலால் அபிஷேகம் நடந்து வந்த நேரத்தில் அதனை சீர்குழைக்கும் விதமாக பசுமடத்தில் உள்ள பசுக்களை வெளியேற்றி பசுமடத்தை பூட்டியதற்கும்,பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுக்க முடியாமல் பக்தர்கள் வேதனை படுவதற்கும் ,அபிஷேகத்திற்கு வெளியில் இருந்து பாக்கெட்பால் விலைக்கு வாங்கி வழக்கத்திற்கு மாறாக செயல்படும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

திருக்கோயிலில் பசுமடத்தில் உள்ள பசுக்களை எதற்காக?என்ன காரணத்திற்காக பண்ணைக்கு அப்புறப்படுத்தினார்கள்?எதன் அடிப்படையில் பசுமடம் பூட்டப்பட்டுள்ளது? என்று திருக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் மத்தியில் விளக்கமளிக்க வேண்டும்.

உலகப்பிரசுத்து பெற்ற திருக்கோயிலில் பசுமடம் பூட்டப்பட்டு பசுக்கள் திருக்கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுதான் முதல் தடவை.இது மிகப்பெரிய கொடுமையான செயலாகும்.

திருக்கோயிலில் பசுமடமும், பசுமாடுகளும் இருந்தால் தான் திருக்கோயிலுக்கு பெருமை.

எனவே மீனாட்சி அம்மன் கோயிலில் பூட்டி கிடக்கும் பசுமடத்தை திறந்து பண்ணைக்கு அனுப்பிய பசுக்களை பசுமடத்திற்கு மீண்டும் கொண்டு வந்து காலம் காலமாக நடைபெற்று வரும் பசுமடத்திலிருந்து பசுமாட்டின் பால் மூலமாக மீனாட்சி சுந்தரேசுவரருக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசுமடத்தில் உள்ள பசுக்களுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டுமென திருக்கோயில் நிர்வாகத்திற்கு இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி சார்பில் இக்கோரிக்கை செய்தியை புகாராக சமர்பிக்கிறது.