• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம்..!

Byவிஷா

Dec 6, 2023

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 200 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் நோய் பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.