• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திமுக மாணவரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா..!

ByKalamegam Viswanathan

Oct 19, 2023

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் அறிவுறுத்துதலின் படி மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆலோசனையின் பேரில் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பாண்டிமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, இந்திராகாந்தி, ஸ்வேதாசத்யன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் தங்கராஜ், சிவராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மருது பாண்டியன், கண்ணன், ஜெய்லானி, மூவேந்திரன், செந்தமிழ் அரசி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பகுதி மாணவரணி நிர்வாகிகள் சுந்தர்ராஜன், தேவா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.