• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்..,

ByKalamegam Viswanathan

Nov 28, 2026

மலை மீது பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்த தீயணை படையினர்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பூர்வாங்கப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, தீயணைப்புத் துறையினர் தற்காப்பு கவசங்கள், கயிறுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் மலை உச்சிக்குச் சென்றுள்ளனர். தீப தூண் அமைந்துள்ள பகுதி முழுவதையும் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ள வீரர்கள், எவ்வித இடையூறுமின்றி நிகழ்வை நடத்தி முடிக்கத் தயார் நிலையில் உள்ளனர்.