• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கந்துவட்டி சட்டம் திருத்தம் வேண்டி, அக்னி சட்டி ஏந்தி காங்கிரஸ் நிர்வாகி போராட்டம்!

Byதரணி

Jul 21, 2023

கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்ய வலியுறுத்தி நூறு மனு வரை தமிழக அரசுக்கு அளித்தும் தமிழகஅரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தி கையில் அக்கினி சட்டி ஏந்தி நூதன முறையில் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அய்யலுசாமி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் தொடர்ந்து மனு அளித்தும் கந்துவட்டி மாபியாக்களை ஒழிக்க தமிழக அரசு ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கயத்தாறு வட்டாட்சியர் அவர்களிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள், மிகப் பெரிய குற்றபின்னனி கொண்ட நபர்கள் ஆகவே கந்துவட்டி புகார் வந்தவுடன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் காசோலை புரோநோட்டுகள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்யும் மாபியாக்கள் சட்டவிரோதமாக மிரட்டி, கைப்பற்றி வைத்து உள்ள வீடுகள், காலிமனைகள், மற்றும் வீட்டு உபயோகபொருள்கள் , பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் (இதில் அதிகம் கையெழுத்து மட்டுமே பெறப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் புரோநோட்டுகள் மிக மிக அதிகம் ) மற்றும் கைப்பற்ற மாவட்ட அளவில் சிறப்பு படைகள் அமைத்து கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கந்து வட்டி வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவான நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடுபத்திற்கு பாதுகாப்பு மற்றும் கந்துவட்டி தொழிலுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டால் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் .
கந்து வட்டி தொழிலுக்கு எதிராக புகார் அளிக்க டோல்ப்ரி நம்பரை தமிழகம் முழுவதும் காவல்துறை ஏற்படுத்த வேண்டும்
கந்துவட்டி தொழில் செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டதிருத்தம் செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காரணமாக நபர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் பதியபட்டுள்ள கந்துவட்டி வழக்கு விபரம் அதில் தண்டனை பெற்று தந்த விபரம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழக அரசு,


தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார்களை விசாரணை செய்ய மாவட்டம் தோறும் மாவட்ட காவல் கண்ணானிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கொண்டு ADSP விசாரணை அதிகாரியாக இருந்து மாவட்ட காவல் கண்ணானிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கந்துவட்டி புகார்களை விசாரணை செய்து கால தாமதம் செய்யாமல் உடனே கந்துவட்டி மாபியாக்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கந்துவட்டி மாபியாக்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நெட்வொர்க் அமைத்து செயல்படுகிறார்கள் அவர்களை காவல்துறை உழவு பிரிவு மூலம் தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கந்துவட்டி மாபியாக்கள் மிகப்பெரிய குற்ற பிண்ணனி கொண்ட நபர்கள் கந்துவட்டி மாபியாக்களுக்கு கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற குற்றபிண்ணனி கொண்ட நபர்கள் இந்த தொழில் செய்கிறார்கள், ஆகவே தமிழக அரசு கந்துவட்டி தொழிலை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்துவட்டி குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும். என கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர் அய்யலுசாமி கூறியதாவது தொடர்ந்து சுமார் நூறு மனுக்கள் வரை தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்தும் நடவடிக்கை இல்லை ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் வருகை தரும் நாளில் எனது மொத்த மனுக்களை கருப்பு பலூன்களுடன் பறக்கவிட்டு அந்த மனுவாவது முதல்வர் அவர்கள் கவனத்திற்கு செல்லும் என்று நம்புகிறேன்என்று கூறினார்.