• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..,

Byஜெ.துரை

Mar 11, 2026

தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி வரையில் நடைபெறவுள்ள இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12,467 பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.

உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!

நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.