• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

துப்புரவு பணியாளர்களுக்கு, காசநோய் கண்டறியும் முகாம்.

ByKalamegam Viswanathan

Jul 4, 2023

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் வட்டாரம், காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளார்களுக்கு காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் தலைவர் ஆர்.கே. செந்தில் தலைமையில் இனிதே துவக்கி வைக்கப்பட்டது. முகாமில், டிஜிட்டல் எக்ஸ் ரே மற்றும் சளி பரிசோதனை , இரத்த பரிசோதனைகள் நடைபெற்றது.
செயல் அலுவலர் ஸ்ரீ ரவி குமார் நன்றி கூறினார்.
இம் முகாமை, காசநோய் பிரிவு மேற்பார்வை யாளார்கள் தங்ககுமார் ,
அக்பர் பாதுஷா, மகாலட்சுமி ஆகியேரர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
கூட்டத்தில், காசநோய் பற்றியும் நோய் பரவும் விதம், குணமாகும் தன்மை பற்றியும், காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் உழவர் பாதுகாப்பு அட்டை இருந்தால் ஆறு மாத சிகிச்சை காலத்திற்கு மாதம் 1000 கிடைக்கும் என்றும் , காசநோய் மாத்திரை சரியாக ஆறு மாதம் சாப்பிட்டால் குணமாகும் என்றும் அவருக்கு காசநோய் துறை சார்பில் மாதம் 500 வீதம் ஆறு மாதத்திற்கு ரூபாய் 3000 கிடைக்கும் என்று தெளிவாக விளக்கம் கொடுக்கபட்டது . இம்முகாமில், செவிலியர், சுகாதார மேற்பார்வையாளர் கலந்து கொண்டு நன்றி கூறினர்.