• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jun 24, 2023

வாழைத்தண்டு சூப் ரெசிபி:

இந்த சூப் செய்வதற்கு கொஞ்சம் இளசான வாழைத்தண்டை எடுத்து நாரையெல்லாம் நீக்கி, சுத்தம் செய்துவிட்டு, மிகப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, இடித்த பூண்டு – 4 பல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கி வந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டை – 2 கைப்பிடி போட்டு, தேவையான அளவு – உப்பு போட்டு, லேசாக வதக்கி சீரக தூள் – 1/4 ஸ்பூன், சோம்பு தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், போட்டு 1/2 கப் அளவு – தண்ணீரை ஊற்றி வாழைத்தண்டை நன்றாக வேக வைக்கவும்.

வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் அந்த தண்ணீரில் இருந்து வாழைத்தண்டை மட்டும் கரண்டியில் வடிகட்டி எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து, இதை மீண்டும் வடிகட்டி குக்கரில் இருக்கும் சூப்பு தண்ணீருடன் கலந்து விடுங்கள். அரைத்த வாழைத்தண்டை பிழியும்போது நார் தனியாக வந்துவிடும். அந்த வாழைத்தண்டின் சத்துக்கள் எல்லாம் சூப்பில் இறங்கிவிடும்.

மீண்டும் இதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். சூப் நன்றாக கொதித்து வரும்போது காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, தூவி அடுப்பை  அணைத்து சுடச்சுட இதை பரிமாறினால் சூப்பரான வாழை தண்டு சூப், சுவையாக தயார்.