

மசாலா நீர்மோர் தயார் செய்யும் முறை:
கொஞ்சம் திக்காக 1 கப் அளவு மோர் நமக்கு தேவை. தயிராக உங்கள் வீட்டில் இருந்தால் அதை மத்து கொண்டு நன்றாக சிலுப்பி விட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை ஒரு குண்டானில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், மிக மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
அடுத்து நன்றாக சுத்தம் செய்த ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மெழுகு தேய்த்து மண் அகல் விளக்கு வருகிறது அதை பயன்படுத்தக் கூடாது. சுத்தமான மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கை அடுப்பில் மேல் வைத்து கடுகு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், மிகக் குறைந்த அளவு கருவேப்பிலை போட்டு தாளித்து இந்த மண் அகல் விளக்கை அப்படியே இடுக்கியில் பிடித்து எடுத்து சுடச்சுட இருக்கும்போது நாம் கலந்து வைத்திருக்கும் மோருக்குள்ளே விட்டு விட வேண்டும். (தாளிப்போடு மண் அகல் விளக்கையும் மோருக்குள் போட்டு விடுங்கள்.)
மோருக்கு மேலே அப்படியே ஒரு மூடி போட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து உள்ளே போட்ட மண் அகல் விளக்கை வெளியே எடுத்து விடுங்கள். மண் அகல் விளக்கின் புகைவாசத்தோடு அந்த மோர் தனி சுவையில் இருக்கும். இறுதியாக இந்த மோரில் தேவையான அளவு உப்பு, காரா பூந்தியை தூவி குடித்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்குங்க. இதை மசாலா மோர் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் தம் மோர் சொல்லலாம். நம் விருப்பம் தான்.
