• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சு

ByA.Tamilselvan

Jun 5, 2023

இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுனர் ஆர்.என்.ரவி பேசும்போது..இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். தமிழகத்தில் அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய கல்வி கொள்கையில், இளைஞர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்பது கிடைப்பது இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் பெரும்பாலும் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதுதவிர பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.