

திருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், டெல்லியில் மல்யுக்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூசன் சரண் சிங் – ஐ கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுக்த வீராங்கனைகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் , திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்யுக்த கிசான் போர்ச்சா அமைப்பின் 50க்கும் மேற்பட்டோர், திடீரென திருமங்கலம் தேவர் திடல் முன்பு , பாஜக எம் பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

எரிந்து கொண்டிருந்த பொம்மையை அணைப்பதற்கு போலீசார் போராடிய போது , போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்ந்து 15 நிமிடம் நீடித்து, காவல்துறையினர் தீயிட்டு எரிக்கப்பட்ட பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர் .இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்….

