• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து விதி மீறல்..,தமிழக அரசின் புதிய அரசாணை..!

Byவிஷா

May 17, 2023

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இனி வீடியோ பதிவின் மூலம் அபராதம் விதிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. வாகனம் ஒட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்காவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி சாலைகளில் சிசிடிவி கேமரா. போலீஸ் காரில் டேஷ் போர்டு கேமரா, போலீசாரின் உடலில் கேமரா ஆகியவை பொருத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு வீடியோ பதிவின் மூலமே அபராதம் விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உடனடியாக அவை நடைமுறைக்கு வர இருக்கின்றன.