• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மதியழகன் பலி-டிரைவர் கைது..,

ByK Kaliraj

Sep 26, 2026

வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மதியழகன் (வயது 30) கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், இரவு உணவு, வெம்பக்கோட்டையில் வாங்கி விட்டு திரும்பி கொண்டிருந்தபோது ஆற்றுப் பாலம் அருகே உள்ள வளைவில் திருவேங்கடத்தில் இருந்து சிவகாசி நோக்கி சென்று இருந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மதியழகன் தூக்கி வீசப்பட்டார்.

அதில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அவரின் மனைவி மொரின் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளி ராஜன் வழக்கு பதிவு செய்து சரக்கு வாகனத்தின் டிரைவர் சிவகாசி வெள்ளையா புரத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 48) கைது செய்தார்.