• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

ByKalamegam Viswanathan

Apr 23, 2023

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார்.
குருபெயர்ச்சி விழா மூன்று நாள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.நேற்று இரவு 9அளவில் மணி பரிகார மகாயாக பூஜை நடந்தது.இதில் ஸ்ரீதர்பட்டர்,ரெங்கநாதபட்டர், சடகோபப்பட்ட,ஸ்ரீ பாலாஜிபட்டர் ,ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர்.இதைத்தொடர்ந்து மகாபூர்ணாஹீதி நடந்து அர்ச்சகர்கள் புனித நீர்க் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.குருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.குருபகவான் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தபின்னர். பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் குவிந்தனர் குருவித்துறை குலுங்கியது.வந்திருந்தவர்கள் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர்.கொரோனோ தொற்றுநோய் காரணமாக அரசு உத்தரவின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ6 அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழு,வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையதுறையினர் ஆகியோர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் வரிசை,வரிசையாக சாமி தரிசனம் செய்ய எற்பாடு செய்திருந்தனர். சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தர்,சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.7 சோழவந்தான் அரசு பஸ் சிறப்பு பேருந்து பக்தர்கள் வசதிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன். செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் ,நாகராஜ்,மணி பிரகாஷ், ஆகியோர் செய்திருந்தனர்.நெடுஞ்சாலை துறையினர் எப்பொழுதும்போல் ரோடு புதிதாக போடாததால் வாகனத்தில் வரக்கூடிய பக்தர்கள் சிரமப்பட்டனர்