• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிங்கப்பூர் செயற்கை கோளுடன் வெள்ளிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ராக்கெட்

ByA.Tamilselvan

Apr 22, 2023

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு டெலியோஸ்-2 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.