• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது

Byஜெ.துரை

Mar 19, 2023

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் அமைந்துள்ள ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் ஒருவரை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.
சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சார தொழில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் (இ.கா.ப) உத்தரவிட்டதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து குற்ற செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம்(R5)காவல் நிலைய ஆய்வாளர் தாம்சன் சேவியர் ஜோசப் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல் குழுவினர் நேற்று விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா என்ற சென்டரை ரகசியமாக கண்காணித்த போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.பின்னர் பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் அந்த ஸ்பா சென்டரில் சோதனைகள் மேற்கொண்ட போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஸ்பா சென்டர் உரிமையாளர் சாரதா வயது (39) என்பவரை கைது செய்தனர்.அந்த பெண்ணிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்களையும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு அவர்களை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர் .விசாரணையில் பெயர் சாரதா (வயது 39) கணவர் பெயர் வெங்கட்ராமன்,புது வண்ணாரப்பேட்டை, வெங்கடேசன் தெருவில் வசித்து வருவதும் ஸ்பா சென்டர் நடத்துவதற்கான அனுமதி உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தியதும் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டார்.