நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டு அரசு பேருந்து தனியார் வாகனங்களை தடுத்து வருகின்றன.
அரசு பேருந்து கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்தது சாலையில் நின்ற யானை வெகு நேரமாகியும் சாலையை விட்டு செல்லாமல் அங்கும் இங்குமாக நடந்து வந்தது பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நீண்ட நேரம் காத்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு விரட்டினார்கள் பின்பு வாகனங்களும் பேருந்தும் இயக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து மஞ்சூரில் இருந்து கோவை சென்ற பேருந்தை வம்பு இழுத்த யானை துதிக்கையே ஆட்டி பிழியரியது. சாலையில் யானை நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும் சாலையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும் வனத்துறை கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்