• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தீ பற்றாமலும், பறவாமலும் தடுக்க தீவிர நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மழை இன்றி காலை நேரங்களில் கடுமையான வெப்பமும் மாலை இரவு நேரங்களில் கடும் குளிரும் பனிப்பொழிவும் உள்ளது. மரம் செடி கொடி புற்கள் காய்ந்து கிடைக்கின்றன. அவ்வப்போது வனப்பகுதியில் ஆங்காங்கே தீ பற்றி எரிந்தும் வருகின்றன. கடந்த சில நாட்களாக கிண்ணக்கொரை இரியசீகை தமிழக எல்லப்பகுதி ஒட்டி உள்ளது. இப்பகுதியில் கேரளாவில் பற்றி எரியும் காட்டுத்தீ தமிழக எல்லைக்குட்பட்டு வராமல் இருக்க வனத்துறை மூலம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி வனத்துறை ஊழியர்கள் மூலம் தீவிரம் காட்டி ஈடுபட்டு வருகின்றனர். தமிழக எல்லைகளில் வனத்துறையினர் முகாமிட்டு தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீ பற்றாமலும் தீ பறவாமலும் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.