• Fri. Apr 26th, 2024

ஆபரேஷன் செய்த நிலையில் + 2 தேர்விற்கு பரிட்சை எழுத வந்த மாணவி

ByKalamegam Viswanathan

Mar 13, 2023

12வகுப்பு தேர்விற்கு , கை ,கால் மற்றும் முதுகில் காயம் அடைந்த மாணவி மருத்துவ கட்டுடன் , பரிட்சை எழுத வந்த வினோதம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவி உமா மகேஸ்வரி , இப்பள்ளியில் சிறந்த மாணவியாக அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்று வரும் நிலையில்,கடந்த 45 நாட்களுக்கு முன்பு , தனது வீட்டில் மேல்மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததில், முதுகு ,கை ,கால் உள்ளிட்டவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் முழுவதும் போல்ட், நட் வைத்து ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த நிலையில் , பள்ளியில் சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்று வரும் உமா மகேஸ்வரி , தனது பெற்றோரின் கவலையை போக்கும் நிலையிலும், தனது கனவை நிறைவேற்றும் விதமாகவும், பிளஸ் டூ அரசு பொது தேர்வு எழுதியே ஆகுவேன் என்ற கட்டாயத்தில் ,பள்ளிக்கு வந்தார்.

அவரை வீட்டிலிருந்து காரில் அழைத்து வரப்பட்டு , அங்கிருந்து பள்ளி அலுவலர்கள் அவரை கைத்தாங்கலாக பள்ளியில் அவருக்கென சாய் படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது .அவருடைய உடல் நிலையை கருத்திற் கொண்டு அரசு உத்தரவின் பேரில், மாணவிக்கு சிறப்பு படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து தேர்வை எழுத முன் வந்துள்ளார்.
இது குறித்து மாணவி உமா மகேஸ்வரி நிருபர்களிடம் அளித்த பேட்டியில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் , என் உடல் முழுவதும் எலும்புகள் முறியப்பட்டு உடலில் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில், எனது கனவான மருத்துவர் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு பொது தேர்வு எழுதவந்துள்ளதாகவும் , எனது தந்தை கூலி வேலை செய்து வருவதால் எங்களது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் உள்ளதால், அவர்களை காப்பாற்றும் நோக்கில் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *