• Sun. Oct 13th, 2024

கொடுக்கின்ற கட்சி அதிமுக… அதை கெடுக்கின்ற கட்சி திமுக -ராஜேந்திர பாலாஜி பேச்சு

ByKalamegam Viswanathan

Mar 13, 2023

விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதை கெடுக்கின்ற கட்சி திமுக என பேசினார்
திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு . 4 ஆயிரமும், தொழிற்சாலையருக்கு . 40 ஆயிரமும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 23 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கக்கூடிய அத்தனை திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் அம்மா பரிசு பெட்டகம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மக்களுக்கு பென்சிலோ அல்லது பேனாவோ கூட வழங்கப்படவில்லை. எழுதாத பேனாவுக்கு கடலில் 80 கோடிக்கு சிலை வைப்பதற்கு பதிலாக இரண்டு கோடியில் கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைத்துவிட்டு மீதமுள்ள 78 கோடிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனா வாங்கி அளித்தால் இந்த ஆட்சியை மக்கள் அனைவரும் வாழ்த்துவார்கள்.50 ஆண்டு கால கனவான அரசு மருத்துவக் கல்லூரி விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்காத நிலை இருந்த சூழலில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% உள் ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதனால் 9 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் படித்த நிலை மாறி தற்போது 500 பேர் படிக்கின்றனர். அவர்களுக்கும் அரசு சார்பில் கல்வி கட்டணம் செலுத்தப்பட்டது.திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக கொடுத்துக் கொண்டிருந்த அனைத்தும் நிறுத்திவிட்டனர்.
ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் அளித்த அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது. தற்போது அம்மா உணவகத்திற்கும் வேட்டுவைத்து வருகின்றனர்.விளம்பரத்தால் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது என்றால் அது திமுக ஆட்சியில் மட்டுமே. ஊடகங்கள் தான் திமுக ஆட்சியை நடத்துகின்றன. கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதை கெடுக்கின்ற கட்சி திமுக. கொடுக்கின்ற ஆட்சி அதிமுக. எடுக்கின்ற ஆட்சி திமுக.புதியதாக அரசியலுக்கு வந்தபோது விஜயகாந்த், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தனர். கலைஞர் கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என யாரும் கூறவில்லை.ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி என்பது நல்ல ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி இல்லாத மக்களுக்கான ஆட்சி உழைப்பாளிகளுக்கான ஆட்சி என்பதை உணர்ந்த அவர்கள் கூறினார்கள்.இல்லத்தரசிகளை வாழ வைத்த தலைவி புரட்சித்தலைவி அம்மா . மடிக்கணினி மூலம் மாணாக்கர்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தியது புரட்சித்தலைவி அம்மா .திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை மந்திரியாக ஆகியது தவிர்த்து வேறு எதுவும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் தான் ராஜபாளையம் பகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தோம். 11 மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.இரண்டு மாதங்கள் தேர்தல் தள்ளி போயிருந்தால் ராஜபாளையத்தில் அரசு கல்லூரி கொண்டு வந்திருப்போம்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *