• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கூடலூரில் உலக மகளிர் தின நிகழ்ச்சி

உலக மகளிர் தின நிகழ்ச்சி தேவாலா பஜார் அன்னை தெய்வானை மஹால் மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
. சாரதா சமூக அலுவலர், சாவித்திரி, வைஜெயந்திமாலா, தர்ஷினி, புஷ்பரஞ்சனி, தனம், மும்தாஜ், புனிதவதி, சாரா ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர். பொன்.ஜெயசீலன் குத்துவிளக்கு ஏற்றினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி நகரசெயலாளர் மு.சேகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் எம்.பி.ஆலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்..துணை தலைவர் நாகராஜ் நகர்மன்ற உறுப்பினர்கள் சூரியகலா ஸ்ரீகலா புவனேஸ்வரி செவிலியர் லோகேஸ்வரி கல்லூரி பேராசிரியர் சுய உதவிக்குழு தலைவர்கள் உறுப்பினர்கள் பள்ளி மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் .பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.கூடலூர் மும்தாஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..