• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம்

தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத சம்பளமும் ஒரு வருட போனஸ் தொகையும் வழங்காததால் நிர்வாகத்தை கண்டித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது மஞ்சு ஸ்ரீ பிளாண்டேஷன் என்ற தனியார் எஸ்டேட்டில் 1500 தொழிலாளர்கள் பணி புரியும் நிலையில் இன்று 300க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக ஊதியம் வழங்காததால் விரக்தி அடைந்த ஊழியர்கள் இன்று கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெய்சீலன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தங்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத சம்பளம் மற்றும் ஒரு வருடத்திற்கான போனஸ் தொகையும் வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது எஸ்டேட் நிர்வாகம் சார்பாக மேலாளர் பேசுகையில் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சம்பளம் வழங்க வேண்டுமானால் இரண்டே முக்கால் கோடி ஆகும் என்றும் தற்போது எஸ்டேட் நஷ்டத்தில் இருப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தரையில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.