


சென்னை வடபழனியில் இருந்து சாலிகிராமம் செல்லும் ஒரு முக்கிய வழித்தடமாக கருதபடுவது அருணாச்சலம் ரோடு. இந்த ரோட்டின் சாலை ஒரம் மழை நீர் வடிகால் பணி அரைகுறையாக முடிக்கபடாத நிலையில் உள்ளது.
இந்த பகுதியியானது மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் ஒரு முக்கியமான பகுதியாகும்.இதனால் இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக காணப்படுகிறது.இந்தப் மழைநீர் வடிகால் பணியினை முடிக்காமல் இருப்பதோடு மட்டுமின்றி பாதுகாப்பற்ற முறையில் கம்பிகள் திறந்த வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதும், இதை கொஞ்சமும் பெறுப்பற்ற நிலையில் செயல்படும் மின்சார துறையினர் மின்சார வயர்களை இந்த சாக்கடை தண்ணீரின் அருகே மிகவும் அலட்சியமான முறையில் போட்டுள்ளனர்.
சாக்கடை தண்ணீர் மழை நீர் வடிகாலில் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் கொசு தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலை யோரம் செல்லும் இந்த பாதளை சாக்கடை கிணற்றை கண்டு பொது மக்கள் மிகவும் அச்சமடைகின்றனர்.
பொது மக்களை காவு வாங்க காத்திருக்கும் இந்த பாதுகாப்பாற்ற மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


