• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு..!

Byவிஷா

Feb 20, 2023

நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் இன்று அம்மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதில், 7 பேர் வேறு மாநிலங்களில் இருந்து மாற்றம் செய்யப்பட்டவர்கள், 6 பேர் புதிய ஆளுநர்களாக ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த 13 மாநிலங்களுக்கு நியமித்த புதிய ஆளுநர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். நாகலாந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.