• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?

ByA.Tamilselvan

Feb 1, 2023
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே  அதிமுக இபிஎஸ் ,ஓபிஎஸ் அணியினர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜகவினர்  போட்டியிடப்போவதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வந்தார்.பின்னர் போட்டியிப்போவதில்லை என அறிவித்தனர்.இந்நிலையில் பாஜக சார்பில் இபிஎஸ் ,ஓபிஎஸ் என இரு அணிகளுக்கும்  யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.. தற்போது ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில், பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் படமும் இடம்பெறவில்லை.  கூட்டணியின் பெயரும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என மாற்றப்பட்டதால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி! அடைந்துள்ளனர். எனவே இபிஎஸ் அணி பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.