• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மேலக்காலில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் எம்வி கருப்பையா சிறப்புரை..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் தனியார் மஹாலில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் பொறியாளர்கள் வசந்தி துர்காம்பிகை மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேலக்கால் ஒய்யனன் கச்சை கட்டி விக்னேஷ் தென்கரை திருச்செந்தில் முள்ளிப்பள்ளம் சின்ன மாயன் மன்னாடிமங்கலம் முனிராஜ் காடுபட்டி மகாராஜன் இரும்பாடி காசிலிங்கம் மற்றும் கருப்பட்டி நாச்சிகுளம் பூச்சம்பட்டி ஆண்டிபட்டி கட்டக்குளம் விராலிப்பட்டி டிவி நல்லூர் சி புதூர் சித்தாலங்குடி நெடுங்குளம் திருவேடகம் ரிஷபம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் அரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.