• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஓடைகளை முதலில் தூர் வாரும் பணியை செய்ய முடிவு..,

ByT. Vinoth Narayanan

Sep 24, 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி வேண்டுகோளை ஏற்று மழை வருவதற்கு முன்பாக நகரில் முக்கியமாக எங்கு அதிக ஓடை அடைப்பு இருக்கிறதோ அந்த ஓடைகளை முதலில் முக்கியத்துவம் கொடுத்து தூர் வாரும் பணியை செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் சங்க தலைவர் கனக பெருமாள் ஓடை தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் சங்க செயலாளர் வேலாயுதம், நகராட்சி சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் முனி செல்வம், ரோட்டரியன் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவி நகரில் ஓடைகளில் தூர்வாரும் பணி நகரில் மழை வருவதற்கு முன்பாக தொடர்ந்து நடைபெறும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கத்தில் நிர்வாகிகள் கூறினார்கள்.