• Fri. Apr 26th, 2024

பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி

ByA.Tamilselvan

Feb 1, 2023

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்..ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு.புதிய வரி சலுகைகள் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.38 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நேரடி வரிகளில் அளித்த சலுகை மூலம் ரூ.37,000 கோடியும் மறைமுக வரி சலுகையால் ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .தங்கம், வெள்ளி, வைரம் மீதான சுங்க வரி அதிகரிப்பு கூடுதல் வரி விதிப்பு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *