• Wed. Nov 11th, 2026

கழிவுகளை வரத்து கால்வாய்களில் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Sep 24, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் வெற்றிலை யூரணி பெரிய கண்மாய்க்கு மழை நீர் வரக்கூடிய வரத்து கால்வாய் அமைந்துள்ளது.

இந்த வரத்து கால்வாய்களில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட கழிவு மூலப் பொருட்களும் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது மழை காலம் தொடங்க இருப்பதால் இந்த கழிவுகள் நேரடியாக . கண்மாய்க்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதனால் கண்மாய் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது. தண்ணீர் மாசு அடைந்தால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

நிலத்தடி நீரும் மாசடைய வாய்ப்புள்ளது.மேலும் கொட்டப்பட்ட கழிவுகளை யாராவது தீ வைத்தால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் மீண்டும் கழிவுகளை வரத்து கால்வாய்களில் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.