• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் அமைக்கும் பணிகள்- மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆய்வு

ByJawahar

Jan 21, 2023

குளித்தலை அடுத்த அய்யர்மலை அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்ல ரோப் கார் அமைக்கும் பணிகளை மாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்ல 1017 படிகள் உள்ளன. பழனிக்கு அடுத்த தமிழகத்தில் இந்தக் கோயிலுக்கு தான் மலைக்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது எனினும் பணிகள் தொய்வு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக முன்னேற்றப் பணிகள் ஏதும் இல்லாமல் தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அய்யர் மலை கோயிலுக்கு வந்து பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.

அதன்பின் கடந்த ஒரு வருட காலமாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் அய்யர் மலை கோவிலுக்கு வந்து நடைபெறும் ரோப்கார் பணிகளை பார்வையிட்டார் .. பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், ஜாபருல்லா,ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தியாகராஜன், மெடிக்கல் மாணிக்கம்,வை.புதூர் பெரியசாமி, செல்வம், தமிழரசன்,அருண்மொழி, மதியழகன், என்சதீஸ்சர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.