• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

லால்குடியில் அதிமுக சார்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை

ByJawahar

Jan 21, 2023

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பாக லால்குடி வடக்கு ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆலோசனை கூட்டத்திற்கு அசோகன் தலைமை வகித்தார்.மாயகிருஷ்ணன், கேசவ ராஜன் வரவேற்புரை ஆற்றினார்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தேர்தல் சமயத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் .மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அதிக வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன். புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூராட்சி செயலாளர் ஜெயசீலன், பொன்னி சேகர், பாசறை செயலாளர் வீ டி எம் அருண், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ டி எம் டோமினிக், முன்னாள் அவை தலைவர் தர்மதுரை, பொதுக்குழு உறுப்பினர் விஜயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்