• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மது பிரியர்கள் கொண்டாட்டம் பொதுமக்கள் திண்டாட்டம்

பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்விளையாட்டு பூங்காவில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்தினர் இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் அருகில் 3422 தமிழக அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது இங்கு வருகின்ற மது பிரியர்கள் அருகிலுள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் அமர்ந்து 5க்கும் மேற்பட்டோர் மது அருந்தி வந்ததால் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் மது பிரியர்களை தட்டி கேட்டதற்கு மது பிரியர்கள் பெண்களை தர குறைவாக இழிவாகவும் பேசினர் இதனால் இரு தரப்பினரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது இதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மது பிரியர்கள் கலைந்து சென்றனர் சம்பவ இடத்திற்கு வந்த பவானி காவல்துறையினர் அங்கு குடியிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் கூறி சென்றனர்
இது போன்று மது பிரியர்கள் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பிடம் மற்றும் திருவள்ளூர் நகர் சாலை பவானி அந்தியூர் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து மது அருந்தி வருவதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர் .இங்கு டாஸ்மார்க் செயல்பட்டு வருவதால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அப்பகுதி பெண்கள் இங்கு செயல்பட்டு வரும் 3422 டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்ந்தால் அடுத்த கட்டமாக சாலை மறியல் மற்றும் ஆட்சியர், முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்