• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது..

ByA.Tamilselvan

Jan 3, 2023

கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்துவந்த கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 265 ஆக இருந்தது. நேற்று 173 ஆக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 78 ஆயிரத்து 956 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 667 ஆக உயர்ந்தது. இதில் நேற்று குணமடைந்த 222 பேர் அடங்குவர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 88 குறைந்துள்ளது. அதாவது தற்போது 2,582 பேர் சிகிச்சையில் உள்ளனனர். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,707 ஆக நீடிக்கிறது.