• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அதிமுக சிதறி இருப்பது ஜெ.க்கு செய்யும் துரோகம்- திருமா

ByA.Tamilselvan

Dec 7, 2022

அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் விசிக தொல்.திருமாவளவன்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.அதே போலஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது நான்கு குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம் எனவும், அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும் .பாஜக அதை பயன்படுத்தும் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.