• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லகிம்பூர் வன்முறை : ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உ.பி அரசு உத்தரவு!..

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இருப்பினும், இது தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவதாகவும், ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.