• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அர்ச்சகர் தற்கொலை ஏன்..?: வெளியானது பரபரப்பு தகவல்..

ByA.Tamilselvan

Nov 16, 2022

நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தற்கொலை குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது
நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர், 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சக அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அர்ச்சகர் நாகராஜ் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் ஏராளமான பணத்தை இழந்துள்ளார். மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி, அதன் மூலமும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.