• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி விழா..,

ByKalamegam Viswanathan

Aug 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 29 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி உற்சவ விழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது 30 ஆம் தேதி குத்து விளக்கு பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மாலை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கருப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

நேற்று மாலை கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். திருவிழாவில் கிராம பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது ஏற்பாடுகளை கருப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.