• Fri. Apr 19th, 2024

9 பேர் விடுதலை இன்று 6 பேர் கைது -தொடரும் அத்துமீறல்

ByA.Tamilselvan

Aug 28, 2022

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களில் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் கூட முல்லைத்தீவு கடற்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து, திருகோணமலை சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கில் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 9 மீனவர்களும் இலங்கைஎல்லைக்குள் மீண்டும் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 9 பேர் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அத்து மீறலுக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *