புதிய பனிப்போர் உருவானால், உலக அளவில் கடுமையான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய சீனாவின் பிரதிநிதி ஜாங் ஜன் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், “உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் உலகம் முழுவதும் உருவாகியுள்ள பல்வேறு பதற்றமான சூழல்கள் அனைத்தும் நமக்கு ஒன்றை தெளிவுபடுத்துகின்றன. பிரச்ச னைகளைத் தூண்டும் முயற்சிகள் மற்றும் பிளவுகளை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள நிலைத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “ஒரு புதிய பனிப்போருக்குள் இந்த உலகம் ஒருபோதும் நுழைந்துவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய பனிப்போரை உருவாக்கும் மனநிலையைத் தவிர்த்தல் அவசியமாகும். பனிப்போர் நிறைவு பெற்று 30 ஆண்டு கள் ஆனபிறகும், கிழக்கு நோக்கி விரிவடையும் நேட்டோவின் முயற்சி, ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பான ஒன்றாக மாற்றி விடவில்லை. ராணுவக் கூட்டணிகளை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியாது” என்றார்.
“புதிய பனிப்போர் வேண்டாம்” ஐக்கிய நாடுகள் சபையில் சீன பிரதிநிதி பேச்சு!
