• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வேலூரில் வீட்டு சுவர் இடிந்து 9 பேர் பலி..!

Byமதி

Nov 19, 2021

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது. எனவே, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் உள்ள மசூதி தெருவில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று அதிகாலை மாடி வீடு இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி 4 குழந்தைகள், 5 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், “வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பெண்கள், 4 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்; பலியான 9 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 நிவாரணம் வழங்கப்படும்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.