• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் 87 வது பிறந்தநாள் விழா …

Byமுகமதி

Oct 1, 2026

புதுக்கோட்டை ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் சிலம்பம், தேக் வாண்டோ பயிற்சி முகாம்
நிறைவு விழா புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை , காவேரிநகர் , திருமலைராயபுரம் , செட்டியாபட்டி
ஆகிய பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்கள் 26 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை அந்தந்த பகுதிகளில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்கள் தங்கள் சிலம்பம் மற்றும் தேக்வாண்டோ விளக்க நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக செய்து காட்டினார்கள்.

விழாவில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமையேற்று நடத்தினார். குட்லக் அப்துல்லா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் தனசேகரன், மருத்துவர் சரவணன்,
மற்றும் புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்கத் தலைவர் அன்பு சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிட்டி ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த தங்கராசு , ஓம் ராஜ் , முகமதுஅப்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் திருச்சகோதரிகள் கலந்து கொள்ள முன்னதாக, புத்தாஸ் வீரக்கலைகள் நிறுவனர் சேது கார்த்திகேயன் வரவேற்றார். செயலாளர் சண்முகராஜா நன்றி கூறினார். புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஒன்றிணைந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.