புதுக்கோட்டை மாவட்டம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா பேரவைத் தலைவர் A.சுப்பையா தலைமையில் மச்சுவாடியில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாநகர தலைவர் புதுகைப் புதல்வன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

விழாவில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பன்னீர் செல்வம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா, செயலாளர் AMS.இப்ராஹிம் பாபு, மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் A.முகமது அப்துல்லா கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் கவிஞர் பீர்முகம்மது R.சங்கர், முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் சங்கர நாராயணன் பூக்கடை முருகன், PN.பாபு, சுப்பு, மாரிமுத்து, சாதிக் அலி, ராஜா, கவிஞர் கவிபாரதி, முருகன், கலியமூர்த்தி, டெய்லர் ரவி, யாசின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





