
அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் மோடியின் படத்தை பாஜக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
தமிழக முழுவதும் ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு வங்கிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட அரசு அலுவலகங்களில். பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் மோடியின் படத்தை வழங்கியும் வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட பாஜக மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஒன்றிய தலைவர் நீலமேகம் உட்பட பாஜக நிர்வாகிகள். ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு வங்கிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட அரசு அலுவலகங்களில். பிரதமர் மோடியின் படத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆண்டிமடம் அருகே காட்டாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு, மோடியின் படத்தை வழங்கியுள்ளனர், அங்கிருந்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் வாங்க மறுத்துள்ளனர். இதற்கு பாஜக நிர்வாகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்துஆண்டிமடம் போலீசார் பாஜக நிர்வாகிகள் 8 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.