

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையயொட்டி, குற்றவழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 காவலர்களும், உ.பி.யைச் சேர்ந்த 10 காவலர்களும், கேரளா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 9 காவலர்களும் அதிகபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல, பீகார், குஜராத், டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வாகியுள்ளனர். இந்த விருது பட்டியலில் 28 பெண் காவல் அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

